000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a முருகன் |
300 | : | _ _ |a கௌமாரம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a யானையின் மேல் அமர்ந்திருக்கும் முருகன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a யானையின் மேல் முருகன் அமர்ந்த கோலம். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக யானையே சித்திரிக்கப்படுகிறது. இந்த யானை பிணிமுகம் என்ற பெயருடையது என்று சங்க இலக்கியங்களால் தெரிய வருகிறது. கடுஞ் சின விறல் வேள் (- கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப் பெருமான்) களிறு ஊர்ந்தாங்கு (- தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல) செவ்வாய் எஃகம் (- சிவந்த முகத்தை உடைய உன் வேல்) விலங்குநர் அறுப்ப ( - எதிர்ப்பவரை அறுக்க) ……என வரும் ஒரு பதிற்றுப்பத்து பாடல் வரிகளிலிருந்து யானை வாகனமாக இருந்தது தெரிய வருகிறது. “உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழுக்கி”, “பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ” என்பன பரிபாடல் வரிகள். சூரனை வதைக்கும் முன் யானை வாகனம் கொண்ட முருகன் சூரனை வதைத்தப் பின் மயில் வாகனம் கொண்டான் என்பது புராணம். சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு யானை வாகனமாகக் கூறப்பட்டுள்ளது. "வேழம் மேல்கொண்டு", " அங்குசம் கடாவ ஒரு கை" "ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி" என்றெல்லாம் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் யானையின் மீது முருகன் அமர்ந்துள்ளதாக நக்கீரன் பாடுகிறார். தேவர்களுக்காக சூரனை வென்ற பின்பு முருகனுக்கு தேவர்களின் தலைவன் இந்திரன் தனது யானையை அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவரை கஜவாஹனர் என்றும் கஜாருதர் என்றும் அழைக்கின்றார்கள். கொடும்பாளுர் முருகன் கிரீட மகுடம் சூடி, நெற்றியில் நெற்றிப்பட்டை, நீள் காதுகளில் மகரகுண்டலங்களும், கழுத்தில் சவடியும் அணிந்துள்ளார். தோள்களில் வாகுமாலை காட்டப்பட்டுள்ளது. மார்பில் சன்னவீரம் அமைந்துள்ளது. நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் இடதில் சக்தி ஆயுதம் தெரிகின்றது. வலது பின் கையில் வஜ்ஜிராயுதம் உள்ளது. வலது முன் கை ஊர்த்துவ முத்திரையாகவும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும் உள்ளன. கைகளில் தோள்வளை மூன்று முன்வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிகளாக அமைந்துள்ளன. வயிற்றில் உதரபந்தம் விளங்குகின்றது. இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய அரையாடை அணிந்துள்ளார். யானையின் முகம் மட்டுமே தெரிகின்றது. |
653 | : | _ _ |a முருகன், பிணிமுகம், யானை மேல் அமர்ந்த கோலம், திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
914 | : | _ _ |a 8.73252599 |
915 | : | _ _ |a 77.44489074 |
995 | : | _ _ |a TVA_SCL_000245 |
barcode | : | TVA_SCL_000245 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |